organic farming
அங்கக வேளாண்மை :: வெற்றிக்கதைகள்

வெற்றிக் கதைகள்

  1. சுற்றுச் சூழலுக்குகந்த நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்
  2. சுற்றுச் சூழலுக்கு தகுந்தவாறு மண்புழு உர அமைப்பதற்கான முறை
  3. இஞ்சிப்பூண்டு சாறு : அங்கக சாகுபடிக்கான உயிரி பூச்சிக் கொல்லி மருந்து
  4. வருமானம் தரக் கூடிய தொழிலாக வாழையை அங்கக சாகுபடியில் செய்தல்
  5. மாவில் விளைச்சலை அதிகப்படுத்துவதற்கான அங்கக முறை
  6. அங்கக சாகுபடிக் கேற்ற அல்போன்சா மா இரகம்
  7. ஒரு ஏக்கர் ரூ.1,00,000 ‘கமகம’ வருமானம் கொடுக்கும் கறிவேப்பிலை..!

1. சுற்றுச்சூழலுக்குகந்த நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் 

தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியன்குடி கிராமத்தில் உள்ள சில முன்னோடி விவசாயிகள் சுற்றுச்சூழலுக்குகந்தவாறு நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார்கள். கிச்சலி சம்பா போன்ற உள்ளூர் நெல் இரகங்களில் இந்த தொழில்நுட்பங்களை நன்றாக பயன்படுத்தியுள்ளார்கள். சாகுபடிச் செலவும் குறைக்கப்பட்டுள்ளது. சந்தையிலும் அங்கக நெல் மிகை விலை பெறும் என்று புளியங்குடியில் அங்கக சாகுபடி செய்து வரும் திரு. P. கோமதிநாயகம் கூறுகிறார்.

“1.6 எக்டர் பரப்பளவில் கிச்சிலி சம்பா என்ற நடுத்தர காலமுடைய (140 நாட்கள்) இரகத்தை சாகுபடி செய்துள்ளேன். விதைகளை பஞ்சகாவ்யாவுடன் விதை நேர்த்தி செய்தேன். நாற்றாங்காலில் ஏரி வண்டல் மற்றும் அங்ககப் பொருட்கள்  அதிகளவில் இட்டேன்.  ஏரிவண்டைலை தாராளமான அளவு பயன்படுத்தினேன். மற்றும் கடைசி உழவின் சில நாட்களுக்கு முன், பசுந்தாள் உரத்தைப் போட்டு உழுது விட வேண்டும். சாண எரிவாயு சேற்றுக் குழம்பை பாசனநீர் மூலம் நடவு வயலில் நாற்றுக்களை நட்ட பின் இட்டேன் என்று விவரித்தார்.

நடவு செய்த 20 நாட்களுக்குப் பிறகு 3% பஞ்சக் காவ்யா ஒரு தடவை தெளித்தேன். 30 வது நாளில், தேங்காய்ப் பால் மற்றும் மோரை சம அளவில் கலந்து, 20 மடங்கு அளவு நீரில் கரைத்து, பயிரின் வளர்ச்சி மற்றும் தூர்களின் எண்ணிக்கை அதிகமாக தெளிக்க வேண்டும். 40 வது நாளில், பஞ்சகாவ்யாவை (3% அதிக திரவக் கொள்ளளவு உடைய கலனில்) எடுத்து தெளிக்கவும். நடவு செய்து 45 நாட்களுக்குப் பிறகு, உயிரி பூச்சி எதிர்ப்பு மருந்தை தெளிக்கவும்.
சீராக பாசனம் செய்ய வேண்டும், 1.6 எக்டர் நிலப்பரப்பிலிருந்து 6 டன் அளவு மகசூல் எடுக்கலாம். கால்நடைகளுக்கான உயர்தர வைக்கோலும் இதிலிருந்து கிடைக்கும். சாகுபடிச் செலவு 14000 ரூபாய் ஆகிறது. அங்கக சாகுபடி நெல்லை ஒரு கிலோ 30 ருபாய் என்ற அளவில் விற்கிறேன். இதனால் அதிக லாபமும், சுற்றுப்புறச் சூழலும் பாதிக்காமல் சாகுபடி செய்ய முடிந்தது என்றும் திரு.கோமதி நாயகம் சுட்டிக் காட்டினார். இவரால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள பல உழவர்கள் அங்கக சாகுபடி செய்கின்றனர்.

“அங்கக நெல் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்களை நான் நடைமுறைப்படுத்தினேன். இதனால் ஒரு எக்டரிலிருந்து திருச்சி – 1 என்ற இரகத்திலிருந்து 9.25 டன் அளவு நெல் அறுவடை செய்யப்பட்டது. வயலில் சணப்பையை அதிகளவில் இட்டு, மட்கச் செய்தேன். எந்தவித பயிர் பாதகாப்பு முறைகளும் தேவையில்லை. ஒரு எக்டருக்கான  சாகுபடிச் செலவு 12500 ரூபாயாகும். நம்முடைய விலங்குகளுக்கு தேவையான வைக்கோலையும் இதிலிருந்தே அறுவடை செய்துக் கொள்ளலாம் என்று திரு. V.அந்தோணிசாமி, புளியங்குடியில் உள்ள மற்றொரு முன்னோடி விவசாயி கூறுகிறார்.

2.சுற்றுச் சூழலுக்கு தகுந்த மண்புழு உரப்பிரிவை அமைத்தல் 

அங்கக சாகுபடியை வெற்றிகரமாகச் செய்வதற்கான அடிப்படை ஆதாரம் மண்புழு உரமாகும். 85% க்கு மேற்பட்டவர்கள் அங்கக சாகுபடியை நம்பியுள்ளனர். உழவர்கள், மண்புழு உர அமைப்பை ஏற்படுத்துவதற்காக, சாதாரணமாக வேயப்பட்ட கூரை (அ) அஸ்பெஸ்ட்டாஸ் சீட் கொண்டு மேற்புறத்தை மூடுவார்கள். அடிப்பகுதியில் மணல் (அ) சிமெண்ட் (அ) கெட்டியான மண் கொண்டு அமைப்பார்கள்.தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள திரு. D. பரணி என்ற முன்னோடி அங்கக விவசாயி, இந்த மண்புழு உர அமைப்பிற்காக அடி மரத்தின் தண்டுப் பகுதிகளை  நான்கு முனைகளிலும் கம்பங்களாக நட்டு ஏற்படுத்தினார்.

பருவத்திற்கான பற்றிழைகள் 

“மட்கும் கம்போஸ்ட் பிரிவு மற்றும் வளரும் மரங்களிலிருந்து அடிமரத் தண்டுகள் ஈரத்தை உறிஞ்சிக் கொள்ளும்” என்று அவர் கூறினார். மேற் கூரைக்கு,  அவர் காய்கறிச் செடிகளை படரும் பற்றிழைகளாக கம்போஸ்ட் பிரிவிற்கு அருகிலேயே வளர்த்தார்.
இந்த பிரிவிலிருந்து ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு, செடிகள் நன்கு வளருகின்றன மற்றும் மண்புழு தயாரிப்பு பிரிவிற்கு தேவையான நிழலையும் இது தருகின்றன. கம்போஸ்ட் மட்டுமில்லாமல், மேற்புறக் கூரையில் படரும் காய்கறிகளிலிருந்து (வெண்டை, கத்திரி, புடலை, பாகல்) ஒரு கிலோவிற்கு 5-8 ரூபாய் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்.

“மேற்புறக் கூரை அமைக்க வேயப்பட்டக் கூரை மற்றும் அஸ்பெஸ்டாஸ் சீட் கொண்டு அமைப்பதற்கு பதில், உழவர்கள் இந்த மாதிரி எளிமையான முறையையும் பயன்படுத்தலாம். இப்படிச் செய்வதால், அவர்களுக்கு இரட்டை வருமானம் கம்போஸ்ட் உரம் மற்றும் காய்கறிகளிலிருந்தும் பெறலாம். 4 ஏக்கர் நிலப்பரப்பில் ரஸ்தாளி வாழை இரகத்தையும் பயிரிட்டுள்ளார். “வணிகரீதியாகவும் இரஸ்தாளி, சந்தையில் நல்ல மதிப்பைப் பெற்றது. பயன்படுத்துபவர்களும், அங்கக  முறையில் சாகுபடி செய்தது தெரிந்தால், உழவர்களும் வாடிக்கையாளர்களை தேட வேண்டியதில்லை என்றும் கூறுகிறார்.

காற்றின் வேகத்திற்கு எதிராக தாங்கி நிற்றல் 

“ரஸ்தாளி இரகம் அதிக உயரம் வளராது. காற்றின் வேகத்திற்கு எதிராக தாங்கி நின்று வளரும்”. பலமான காற்றானது வாழை மரங்களை வேரோடு சாய்ந்து விடும். அதனால் உழவர்கள் வாழை மரத்தை மரக்கம்பை முட்டுக் கொடுத்து நிறுத்துவார்கள். அங்கக முறைகளை பின்பற்றுவதால் என்னுடைய வாழைத்தோட்டத்தில் வாடல் நோய் தாக்காமல் நிலைத்து நிற்கின்றன. “இந்த நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த இரசாயன முறைகள் பின்பற்றினால் எந்த விளைவையும் தருவதில்லை என்று அவர் கூறினார். “தரமான, ஆரோக்கியமான மரங்களிலிருந்து தெரிந்த ஆதாரங்கிளிடமிருந்து கன்றுகளை வாங்குகிறேன். வாங்கி கன்றுகளை 10% பஞ்சகாவ்யா மற்றும் 50 கிராம் சூடோமோனஸ் கரைசலில் 3-5 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு, 780 – 800 குழிகளை 8x8 மீ இடைவெளி விட்டு தோண்டி, பின் கன்றுகளை நட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 3 கிலோ தொழு உரம் அளிக்கலாம்.

சூட்டை உருவாக்குதல் 

குழிகளில் (அ) கன்றுகளுக்கு அருகில் நேரடியாக தொழு உரத்தை இட்டால், வெப்பம் உருவாகி வாழை மரத்தின் வளர்ச்சியை பாதிக்கும். அதனால் தொழுஉரத்தை குழயிலிருந்து சற்றுத் தள்ளி இட வேண்டும். மாதமொரு முறை 5 மாதம் உடைய மரத்திற்கு பஞ்சகவ்யாவை தெளிக்கலாம். அவர் முதல் மகசூலை கன்று நட்டு 14 மாதங்களுக்கு பிறகு பெற்றார். இந்த இரகத்தை 2 வருடம் வரை வளர்க்கலாம்.

“ ஒரு குலையானது 120 -130 ரூபாயாக விற்றால் 80,000 ரூபாய் வருமானமும் கிடைக்கிறது. ஒரு மரத்திற்கான சாகுபடிச் செலவு 35 ரூபாய். அனைத்து மரத்திற்கு ஆகும் செலவுகளைக் கணக்கிட்டுப் பார்த்தாலும் கூட நிகர வருமானம் 50,000 ரூபாய் கிடைக்கிறது” என்று கூறினார்.
மேலும் தகவலுக்கு திரு. D. பரணி, கொத்தன்குடி கிராமம், கோமல் அஞ்சல், மயிலாடுதுறை தாலுக்கா , நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு – 609 805. தொலைபேசி – 04364 – 228711  &  04364-273415 அலைபேசி : 9486278569.

3. இஞ்சி பூண்டு சாறு : அங்கக சாகுபடிக்கான உயிரி பூச்சிக் கொல்லி 

தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் செல்வி இராஜரீகா என்பவர் உயிரி பூச்சிக் கொல்லி தயாரித்து வருகிறார். அங்கக முறைகள் விலையுர்ந்த இராசயனப் பொருட்களில் முதலீடு செய்வதைக் குறைக்கிறது என்று கூறுகிறார்.

கடந்த 4-5 பத்தாண்டுகளில், மண்ணில் அதிகப்படியான இராசயனப் பொருட்கள் படிந்து, நச்சுத் தன்மையை ஏற்படுத்துகின்றன. பல இடங்களில், நிலம் தரிசாக மாறுகின்றன மற்றும் நிலத்தடி நீர் நச்சுத் தன்மையாக மாறுகின்றன. அங்கக இடு பொருட்கள் பாதுகாப்பானவை, நச்சுத் தன்மையற்றவை. விலையும் மிகக் குறைவு. உதாரணத்திற்கு, இரசாயன பூச்சிக் கொல்லிகள் மற்றும் உரங்களை ஒரு எக்டர் சாகுபடிக்கு பயன்படுத்தியிரு்நதால், 6000 – 7000 ரூபாய் செலவாகிறது. அதுவே அங்கக சாகுபடி செய்வதாக இருந்தால் 500 -1000 ரூபாய் தான் செலவாகும் என்று சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ராசி அங்கக பண்ணையின் உரிமையாளர் செல்வி, இராஜரீகா என்று கூறுகிறார்.

குறைந்த விலை 

இராசயனப் பொருட்கள் கொண்டு சாகுபடிச் செய்வதால் கிடைக்கும் உயர் விளைச்சலை விட அங்கக சாகுபடியில் பெற முடியாது. அங்கக விவசாயிகள் தங்களுடைய நிலமாவது பாதுகாப்பாக இருக்கிறது. இரசாயனப் பொருட்கள் வாங்குவதற்கும் அதிக முதலீடு செய்ய வேண்டியதில்லை. அதிக சாகுபடி செலவு அதிகமில்லை. உழவர்கள் பயன்படுத்துவதும் பாதுகாப்பாகவும், இயற்கைப் பூச்சி எதிர்ப்புள்ளவையாகவும் உள்ளது.

ஐந்து இலைச் சாறு 

எருக்கு,காட்டாமணக்கு, வேம்பு, செந்தில் கொடி, நொச்சி, ஆடாதோடை, சிறய நங்கை, பீனாரி சங்கு, அரப்புத் தூள், போன்றவற்றிலிருந்து ஐந்துவித இலைச் சாறுகளை அவர் பயன்படுத்தியுள்ளார். இவை அனைத்து கிராமங்களில் கிடைக்கும். ஒவ்வொரு செடியிலிருந்தும் 1 கிலோ இலைகளை பொடி செய்து, விழுதாக்க வேண்டும். இதை 5 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும். பின் இதை 5 லிட்டர் நீரில் கரைத்து, 5 நாட்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். 500 மி.லி கலவை வேண்டுமென்றால், 10 லிட்டர் நீரில் கரைத்து, செடிகளின் மீது தெளிக்க வேண்டும் என்று விரிவாகக் கூறினார்.

இஞ்சி பூண்டுச் சாறு 

1 கிராம் இஞ்சி, 1 கிராம் பூண்டு, 2 கிராம் பச்சை மிளகாய், 5 லிட்டர் கோமியம் மற்றும் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை விழுதாக்கி, கோமியம் மற்றும் நீருடன் கலக்க வேண்டும். 10 நாட்களுக்குப் பிறகு, இந்தக் கலவையை வடிகட்டி, நீரில் கரைத்து, செடிகளின் மீது தெளிக்க வேண்டும்.

தெளிக்க தகுந்த நேரம் 

தெளிப்பதற்கு தகுந்த நேரம் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை தெளிக்கலாம். மண், பயிர் மற்றும் இதர காலநிலை காரணிகளைப் பொறுத்து, இதன் அடர்த்தியை அதிகப்படுத்தலாம் (அ) குறைக்கலாம். கரைசல்கள் பயன்படுத்தும் அருகிலுள்ள அங்கக விவசாயிகளை தொடர்பு கொள்ளலாம் (அ) செல்வி இராஜரிகாவை தொடர்பு கொள்ளலாம்.
செல்வி. இராஜரீகா, அங்ககப் பண்ணைகள், முத்துப்பட்டி, கல்லல் வழி, சிறுவாயல் அஞ்சல், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, மின்னஞ்சல் – rajareega@rediffmail.com. கைபேசி : 9865582142, தொலைபேசி : 04566 – 284937.

4. லாபம் தரும் தொழிலாக அங்கக முறையில் வாழைச் சாகுபடி 

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அங்கக சாகுபடி என்பது இப்பொழுது தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இரசாயன உரங்களைப் பயன்படுத்திய உழவர்கள், தற்பொழுது அங்கக சாகுபடிக்கு மாறியுள்ளனர். அண்மையில், இந்திய மத்திய வங்கி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான உழவர்களுக்கு எப்படி அங்கக சாகுபடியை வெற்றிகரமாக செய்வது என்பது பற்றி முதல் அறிமுகம் தந்தார்கள். மரங்குளத்தில் உள்ள உயர் தர தோட்டக்கலை பண்ணையில், வாழை, மக்காச் சோளம் மற்றும் நெல்லை அங்ககச் சாகுபடி முறையைப் பயன்படுத்தி செய்துக் காட்டினார்கள்.

குழந்தைச்சாமி என்கிற முன்னோடி விவசாயி மற்றும் உயர்தர தோட்டக்கலை பண்ணையின் உரிமையாளரின் கருத்துப்படி, அங்கக வேளாண்மை விளைச்சல் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை அதிகப்படுத்துகிறது. மராங்குளத்தில் உள்ள பண்ணையில் அங்கக உரங்களைப் பயன்படுத்தி வாழை பயிரிட்டார். அதனுடைய விளைச்சல் மற்றும் தரம் நன்றாக இருந்தது.

1.5 ஏக்கர் நிலப்பரப்பில் ரஸ்தாளி மற்றும்  3 ஏக்கரில் ரொபஸ்டா இரக வாழையையும் அங்கக முறையைப் பயன்படுத்தி சாகுபடி செய்தார். ரஸ்தாளியைப் பொறுத்த வரை, ஒரு குலையில் 5-6 சீப்புகள் அதிகமாக வந்தது.

குலையில் சீப்புகளுக்கு இடையில் போதுமான இடைவெளி இருந்தது. அதனால் பழமும் பெரிதாக தோன்றியது என்று திரு.குழந்தைசாமி கூறினார். ஒரு குலையின் எடை 20 கிலோவாகவும், 200 ரூபாய் விலையும் பெற்றது. ரொபஸ்டா இரகத்தைப் பொறுத்த வரை, ஒரு ஏக்கரில் 1600 மரங்கள் அடர் நடவு முறையில் சாகுபடி செய்யப்பட்டது. ரஸ்தாளியில் ஒரு ஏக்கருக்கு 1000 மரங்கள் அடர் நடவு முறையில் பயிரிடப்பட்டது. ரொபஸ்டா இரகத்தில், ஒரு குலையில் 12 -15 சீப்புகளும், குலையின் எடை 30 - 35 கிலோவும் இருந்தது. குழந்தைசாமியால் பயன்படுத்தப்பட்ட உரங்களாவன மட்கிய அங்ககப் பொருட்கள், வேம்பு, பஞ்சகவ்யா ஒருங்கிணைந்த பண்ணை முறையிலிருந்து, பஞ்சகாவ்யா கால்நடைகளின் கோமியம் மற்றும் எரு பெறப்பட்டு அங்கக வேளாண்மையில் பயன்படுத்தப்பட்டது.

சென்னையில் அங்கக முறையில் சாகுபடி செய்யப்பட்ட வாழைக்குரிய கடையில் மிக்க விலை பெறுகிறது. திருச்சி சந்தைக்கு வாழைகளை அனுப்புகிறார்.
2 ஏக்கர் நிலப்பரப்பில் மக்காச் சோளத்தையும் 2 ஏக்கரில் நெல்லும் அங்கக முறைப்படி சாகுபடி செய்தார். அங்கக முறைப்படி சாகுபடி செய்வதால், ரஸ்தாளியில் வாடல் நோய் தாக்குதல் இல்லை.

திரு.குழந்தைசாமி அவர்கள், திரவ உயிர் உரங்களை பயன்படுத்தினார். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் வாழை பயிரிட்டு, அதற்கு திரவ உயிர் உரங்களை பயன்படுத்தினார். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் வெனிலாப் பயிரும் பயிரிட்டார்.

கட்டமைப்புக்காக 9 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது. நுண்தெளிப்பு பாசனமுறையை நிழலுள்ள வலைப்பகுதியில் பயன்படுத்தினார். “தென்னைக்கு நடுவே வெனிலாப் பயிரை ஊடுபயிராக பயிரிடுவதால் லாபகரமான தொழிலாக உள்ளது என்று குழந்தைசாமி கூறினார்.

5. மாவிளைச்சலை அதிகரிப்பதற்கான அங்கக முறைகள் 

அங்கக உரங்களை மாவிற்கு அளித்தால் நல்ல பலனைத் தருகிறது. அங்கக உரங்களான மண்புழு உரம், பஞ்சகாவ்யா, வெர்மிவாஷ் பயன்படுத்தி மரத்தின் வளர்ச்சியையும், பழங்கள் உருவாவதையும் அதிகரிக்கலாம்.

முக்கியமான ஊட்டச்சத்துக்கள் 

சென்னையில் உள்ள மண்புழு உர தொழில்நுட்பாளர் மற்றும் சுற்றுப்புற சூழல் ஆர்வலருமான டாக்டர். S. சுந்தரவடிவேல் கூறுகையில், பஞ்சகாவ்யா மற்றும் மண்புழு உரத்தை, மரத்தின் ஆரம்ப நிலையிலிருந்து, முதிரும் நிலை வரை மரத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து, பூச்சித் தாக்குதலையும் தருகிறது. மண்புழுக்களிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. மண்புழுக்கள் உள்ள மண் அடுக்கின் நடுவே நீரைப் பாய்ச்சி, பின் சேகரிக்கப்படும் நீரே வெர்மிவாஷ் என்றழைக்கப்படுகிறது. இது அனைத்துப் பயிர்களுக்கும் தெளிப்பதால் பயனுள்ள ஒன்றாக உள்ளது.

பூச்சி எதிர்ப்பு 

பஞ்சகாவ்யா என்பது பசு மாட்டுச் சாணி, பசு கோமியம், பசும் பால், மோர் மற்றும் நெய்யை தகுந்த அளவில் கலக்கி, தயாரிக்கப்படும் ஒரு அங்கக வளர்ச்சி ஊக்கியாகும். இவை செடிகளின் மீது தெளிக்கப்படுகிறது. இதில் பல பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துகளை கொண்டது. பயனுள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளையும் கொண்டது.
பிளாஸ்டிக் (அ) சிமெண்ட் தொட்டி (அ) மண்பானையில் 5 கிலோ பசுமாட்டு சாணி மற்றும் 1 கிலோ பசு நெய் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்தக் கலவையை 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை கலக்கப்படுகிறது. “3 லிட்டர் பசும்பால், 2 லிட்டர் பசு நெய், 3 லிட்ர் கரும்புச் சாறு, 3 லிட்டர் இளநீர் மற்றும் 10 -12 வாழைப்பழங்களை கலந்து

இந்தக் கலவையுடன் சோக்கவும். இந்த கலவையை 15 நாட்களுக்கு அப்படியே வைத்து புளிக்கச் செய்ய வேண்டும் என்று சுந்தரவடிவேல் கூறினார்.
இந்த கலவை உள்ள கலனை வலை (அ) காட்டன் துணி கொண்டு மூடுவதால், காற்றோட்டம் இருக்குமாறு செய்யலாம். இரண்டு (அ)  மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்தக் கலவையை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். 6 -7 வயதுடைய மாமரத்திற்காக, ஒரு மரத்திற்கு 10 கிலோ மண்புழு உரமும், 30 லிட்டர் நீரில் கரைக்கப்பட்ட

ஒரு லிட்டர் பஞ்சகாவ்யா கரைசலை இலைகளின் மீதும், மரத்தின் அடிப்பகுதியிலும் தெளிக்க வேண்டும்.
டாக்டர் சுந்தரவேலின் கருத்துப்படி, பஞ்சகாவ்யாவை மரத்தின் உச்சியின் மீது மற்றும் அடிமரத்திலும் 4-5 முறை தெளிக்க வேண்டும் என்றும் கூறினார். பூக்கும் பருவத்திற்கு முன் (ஜனவரி – மார்ச்) முதல் முறை தெளிப்பதால் பூக்கள் உருவாவதை அதிகப்படுத்தலாம்.

இரண்டாவது தெளிப்பு 15-20 நாட்களுக்குப் பிறகு தெளிக்க வேண்டும். இந்த முறையை பூக்கள் சிறிய மொட்டுகளாக மாறும் வரை தெளிக்க வேண்டும். மொட்டு உருவானவுடன் மாதமொரு முறை தெளிக்க வேண்டும். பஞ்சகாவ்யா மற்றும் மண்புழு உரத்தினால் பழங்களின் அளவு, எண்ணிக்கை அதிகரிக்கவும், பழங்களின் நிறத்தை உயர்த்தவும் உதவுகிறது.

பரிந்துரைக்கப்படும் செயல்முறை 

ஒரு எக்டர் நிலப்பரப்புடைய மாமரங்களுக்கு 25 லிட்டர் பஞ்சகாவ்யா (750 -800 லிட்டர் நீருடன் கலந்து) 4-5 டன் மண்புழு உரத்துடன் கலந்து அளிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. பழஈக்களைக் கட்டுப்படுத்த பஞ்சகாவ்யாவை தெளிக்கலாம் என்றும் கூறுகிறார். அங்கக உரங்களை அளிப்பதால் பெரிய அளவுடைய இலைகள், அதிக அடர்த்தியுடைய பரப்பை ஆக்ரமித்து, அதிகப்படியான வேர்களை வளரும்படி செய்கிறது. பழங்களின் சுவை மற்றும் வைப்பக் காலமும் திருப்திகரமாக உள்ளது.

தழைச்சத்தை நிலைநிறுத்தும் பாக்டீரியா 

அங்கக உரங்களை இந்த மரங்களுக்கு அளிப்பதால், தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தும் செயலை அதிகப்படுத்துகிறது. பலதரப்பட்ட பயனுள்ள நுண்ணுயிரிகளான அசோஸ்பைரில்லம், அசிட்டோ – பாக்டர், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் போன்றவைகளின் வளாச்சிக்கான ஒரு கொண்டு செல்லும் காரணியாக விளங்குகிறது” என்று கூறுகிறார். 
தொடர்புக்கு: டாக்டர் எஸ்.சுந்தரவடிவேல், கைபேசி : 98843 – 90104, மின்னஞ்சல் : sundaravadivel@hotmail.com 

6. அங்கக சாகுபடிக்கு உகந்த அல்போன்சா இரகம்:

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அங்கக வேளாண்மையின் கீழ், மா இரகங்களின் அரசனான அல்போன்சா இரகம் நன்றாக விளைகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் அனைத்து திறனும் அழிக்கப்படுகிறது என்று சென்னை, டேபே (TAFE) கம்பெனியின் துணைத தலைவர் (வேளாண் ஆராய்ச்சி) திரு. எஸ்.எஸ். நாகராஜன் கூறுகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ‘J பண்ணை’ கீழம்பாக்கத்தில் உள்ள ‘ருமானி’ இரக மாம்பழத் தோட்டத்தை விரிவுப்படுத்தியவர். திரு.நாகராஜன் அவர்கள் அல்போன்சா மா இரகத்தின் விளைச்சலை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார். கடந்த 35 வருடங்களில். ‘ருமானி’ இரகம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டபின், அவர் 1998 –ம் வருடம் அல்போன்சா இரகத்திற்கு மாறி, வெற்றிகரமாக ஆராய்ச்சி நடத்தியுள்ளார். சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் அங்கக இடுபொருட்களை அளித்ததற்கு நல்ல பலனைத் தந்து, அதிக தரமுடைய சுவையான பழங்களை, கவரத்தக்க வாசனையுடன் தருகிறது என்று விரிவாக  கூறினார். ‘J’ பண்ணையை 0.8 எக்டர் நிலப்பரப்பில், 140 அல்போன்சா கன்றுகளை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள  நாற்றங்காலில் பெற்றார். இந்த இரகமானது, அடர் நடவு முறைக்கு ஏற்றது. காய்ப்பின் ஆரம்ப காலங்களில் குறைந்த விளைச்சலைத் தந்தது.

நட்டு 9 (அ) 10 வது மாதங்களிலிருந்து காய்ப்புத் தொடங்குகிறது என்றும் கூறினார். ஒவ்வொரு இளஞ்செடியும் ஆகஸ்டில்  அதிகப்படியான தொழுஉரத்துடன் அசோஸ்பைரில்லம் 400 கிராம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 400 கிராம் கலந்து அளிக்கப்பட வேண்டும். ஒரு மரத்திற்கு, ஒரு நாளைக்கு 25 லிட்டர் நீர் சொட்டுநீர் பாசனம்  மூலம் அளிக்கப்படுகிறது. மற்ற தோட்ட முறைகளான, ஒட்டுக்கட்டிய இடத்திற்கு கீழே தோன்றும் குருத்துக்களை  வெட்டுதல், களை எடுத்தல், இடைவெளிகளில் உழுதல், சுற்றுப்புற சூழலுக்குகந்த  பயிர் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும்.

முதல் ஐந்து வருடங்களில், சணப்பையை மானாவாரி பயிராக பயிரிட்டு, அதை மண்ணுடன் கலந்து உழுதுவிட வேண்டும். இடைவெளிகளில், வேர்க்கடலையை பாசனப் பயிராக பயிரிடலாம். கடலை பிடுங்கியவுடன், செடியை மண்ணுடன் கலந்து உழுது விட வேண்டும். 140 மரங்களில், 112 மரங்கள் நட்டு 5 வருடத்திலிருந்து 70 பழங்களும், ஒவ்வொன்றும் 250 கிராம்  எடையுள்ளதாகவும் இருக்கும். மொத்தமாக 2000 கிலோ பழங்கள் அறுவடை செய்யப்பட்டு, பண்ணையில் ஒரு கிலோ 12 ரூபாய் என்று விற்கப்படுகிறது முதல் வருடக்காய்ப்பிலிருந்து மொத்த வருமானம் 24000 ரூபாய்.  முதல் 5 வருடங்களுக்கான சாகுபடிச் செலவு ரூ.24000 என்று கூறுகிறார்.
பழங்கள் நல்ல தரத்துடன், சுவையுடன், மென் சதை பிரச்சனையற்று காணப்படும். 0.8 எக்டர் நிலப்பரப்பில், 6 வருடங்களுக்கு பிறகு 3000 கிலோ பழங்கள் தருகின்றன. மரம் வளர வளர,  30 வருட மரமானது 2500 பழங்களைத் தருகின்றன. உழவர்கள் இரசாயன உரங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அல்போன்சா ஏற்றுமதிக்கு ஏற்ற சிறந்த இரகம். அதை அங்கக முறையில் பயிரிட்டால், ஏற்றுமதிச் சந்தையில் அதன் மதிப்பு உயரும்” என்று திரு. நாகராஜன் விரிவாகக் கூறினார்.